மதுரையின் பல்வேறு இடங்களில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் கனமழை

மதுரையின் பல்வேறு இடங்களில் இடி மின்னல் சூறை காற்றுடன் கனமழை பெய்ததால் சாலையோர மரங்கள் அடியோடு சாய்ந்தன

Update: 2019-06-04 19:10 GMT
மகபூப்பாளையம், கோரிப்பாளையம், திருப்பரங்குன்றம், மாட்டுத்தாவணி, அரசரடி , செல்லூர் திருமங்கலம், சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை முதல் கனமழை பெய்தது. இதனால், சாலை ஓரங்களில் நின்றிருந்த மரங்கள் சாய்ந்தன. ஆங்காங்கே வீடுகளில் உள்ள மேற்கூரைகள் சரிந்தன. ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், இருள் சூழ்ந்து காணப்பட்டது.

திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழையால் வெப்பம் தணிந்தது

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தததால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், திருத்தணி, பள்ளிப்பட்டு , ஆர்கே பேட்டை, நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் மழை பெய்தது . மழையால், திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

திண்டுக்கலில் ஒரு மணி நேரம் கன மழை

கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் திண்டுக்கல்லிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றின் காரணமாக சில இடங்களில் மரங்கள் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து குளிர் காற்றுடன் கனமழை 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில், நான்காவது நாளாக மழை பெய்தது. தொடர்ந்து குளிர் காற்றுடன் பெய்து வரும் மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்