அடுத்த 96 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை - புவனேஸ்வர் வானிலை மையம் தகவல்

அடுத்த 96 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Update: 2019-06-04 18:27 GMT
அடுத்த 96 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை, கேரளாவில் துவங்கும் என, புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பிஸ்வாஸ், கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதும், ஒடிசாவின் வடக்கு, மற்றும் தெற்கு பகுதிகளில் ஆங்காங்கே சூறைக்காற்று வீசும் என கூறியுள்ளார். வானிலை மையம் அறிவித்துள்ள இந்த தகவலின்படி, இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்