"இந்தி கட்டாயம் என்பதை திரும்பப் பெற்றிருப்பது கருணாநிதி வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது" - ஸ்டாலின்
கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், 'இந்தி கட்டாயப் பாடம்' என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கருணாநிதி வாழ்கிறார் என்பதைக் காட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதி பிறந்த நாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், 'இந்தி கட்டாயப் பாடம்' என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கருணாநிதி வாழ்கிறார் என்பதைக் காட்டுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் குறிப்பிடும் போது, ஆதிக்க
இந்தித் திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னைத் தமிழைக் காப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
தலைவர் கலைஞர் பிறந்தநாளை செம்மொழி நாளாக நாம் கொண்டாடும் வேளையில், இந்தி கட்டாயப் பாடம் என்பதை மத்திய அரசு திரும்பப் பெற்றிருப்பது, கலைஞர் வாழ்கிறார் என்பதைக் காட்டுகிறது.
— M.K.Stalin (@mkstalin) June 3, 2019
ஆதிக்க இந்தித் திணிப்பை எந்நாளும் தகர்த்து அன்னைத் தமிழைக் காப்போம்!#செம்மொழிநாள்#HBDKalaignar96pic.twitter.com/mQRW3kvPVf