விவசாய கிணறுகளில் தண்ணீர் பிடிக்கும் லாரிகளுக்கு எதிர்ப்பு : லாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் கிராமத்தில் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சின்னகாலனி மற்றும் பெரிய காலனி ஆகிய பகுதிகளில், நிலவி வரும் தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சுமார் 15க்கும் மேற்பட்ட விசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினமும் நூற்றுக்கான லாரிகளில் தண்ணீர் பிடித்து, சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்கள், இதனால் தான் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதாக குற்றம் சாட்டி தண்ணீர் எடுத்த லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தண்ணீர் எடுக்க விடமாட்டோம் என உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்படது.