திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை மீது மின்னல் தாக்கி தீ

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை மீது மின்னல் தாக்கி திடீரென்று மலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

Update: 2019-05-30 22:08 GMT
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலை மீது மின்னல் தாக்கி திடீரென்று மலையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.சிறிது நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக தீ தானாகவே அணைந்தது. அண்ணாமலையார் மலை மீது ஏற்பட்ட தீயை அணைக்க அண்ணாமலையாரே மழையை பொழிய வைத்ததாக பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.

இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை :



தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இடி, மின்னலுடன் கூடிய கன மழை :



பெரம்பலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டதால் மாவட்டம் முழுவதும் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. இதேபோல் பலத்த காற்றினால் போக்குவரத்து சிக்னல் தூண்கள், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது. கடந்த சில நாட்களாக  வெயில்   வாட்டி வந்த நிலையில் திடீரென பெய்த கனமழை பொது மக்களை  மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

2 மணி நேரத்துக்கு மேலாக மழை :

ஈரோட்டில் கொடுமுடி, சாலை புதூர், காசிப்பாளையம், ஊஞ்சலூர், மொடக்குறிச்சி, அரச்சலூர், ஆகிய பகுதிகளில் 2 மணி நேரத்துக்க மேலாக இடி - மின்னலுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது. தொடர் மழையால் ஈரோட்டில்  ரோடுகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்