"அரசு சம்பளம் வழங்காததால் தற்கொலை" - அரசு பேருந்து ஓட்டுநரின் மரண வாக்குமூலம் - பரவும் வீடியோ

புதுச்சேரி அரசு, கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்காததால் உயிரை மாய்த்துக் கொண்டதாக அரசு பேருந்து ஓட்டுநர் நீதிநாதன் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-05-30 08:56 GMT
புதுச்சேரி அரசு, கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்காததால் உயிரை மாய்த்துக் கொண்டதாக அரசு பேருந்து ஓட்டுநர் நீதிநாதன் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். நீதிநாதன் சிகிச்சை பெற்ற போது, அவரை பார்க்க சென்ற தொழிற்சங்கத்தினர், விபரீத முடிவை எடுத்தற்கான காரணத்தை கேட்டார்கள். பதிலளித்த பேருந்து ஓட்டுநர் நீதிநாதன், கடன் தொல்லை, வீட்டு வாடகை செலுத்த முடியவில்லை, சாப்பாட்டிற்கே வழி இல்லாததால் தற்கொலை முடிவை எடுத்தாக கூறுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்