மதுரையில் ஒரு மணி நேரம் பெய்த கோடை மழை
அக்னி வெயில் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்தது.
அக்னி வெயில் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில், மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோடை மழை பெய்தது. முக்கிய பகுதிகளான பெரியார் பஸ் ஸ்டாண்ட், வில்லாபுரம் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இடி, மின்னலுடன் கன மழை
மதுரை மேலூர் பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. சிட்டம் பட்டி, வெள்ளாரி பட்டி கொட்டம்பட்டி மேலவளவு மற்றும் தும்பைப் பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. காற்றும் வேகமாக வீசியதால், நான்கு வழி சாலையில் உள்ள விளம்பர கோபுர பலகைகள் மற்றும் மரங்கள் சாய்ந்தன. அக்னி வெயிலின் கடைசி நாள் என்பதால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பித்துள்ளனர்.