திருச்சியில் 2 பெண் குழந்தைகள் மாயம் : புகாரை ஏற்க போலீஸார் மறுப்பு?

திருச்சியில் 2 பெண் குழந்தைகள் மாயமான விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநகர காவல் ஆணையரிடம் பெற்றோர் புகார் அளித்தனர்.

Update: 2019-05-27 18:45 GMT
திருச்சி கைலாசபுரம் பாய்லர் தொழிற்சாலை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - லூர்துமேரி தம்பதி. பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 23ம் தேதி தெப்பக்குளம் அருகே பலூன் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது பெற்றோருடன் அமர்ந்திருந்த ஜான்சி, தமிழ்செல்வி ஆகிய 2  பெண் குழந்தைகள் திடீரென மாயமாகினர். 

இது தொடர்பான புகாரை, கோட்டை சரக காவல் நிலைய போலீஸார் ஏற்கமறுத்து அவர்களை அனுப்பி விட்டதாகவும், 4 நாட்களாகியும் மாயமான 
 குழந்தைகள் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்றும் பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.  இதையடுத்து, திருச்சி மாநகர காவல் ஆணையரை சந்தித்து பெற்றோர் மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்