கோவை - கேரளா சாலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த துடியலூர் போலீசார் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, 2 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினை சரிசெய்யப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் கோவை- கேரளா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.