"திசை மாறிய தொண்டர்கள் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்" - ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை

அதிமுகவில் இருந்து திசை மாறிய தொண்டர்கள் ஒன்று பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வமும் அழைப்பு விடுத்துள்ளனர்.

Update: 2019-05-23 19:21 GMT
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் அக்கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை தேர்தலிலும்,  சட்டமன்ற இடைத்தேர்தலிலும்  வாக்காளர்கள் தங்களது தீர்ப்பினை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.  சட்டப்பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்திருக்கும் வாக்காள பெருமக்களுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக அதில் தெரிவித்துள்ளனர். 
தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை காட்டுகின்றன என தெரிவித்துள்ள இருவரும், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என உறுதி கூறுவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், திசை மாறிய அதிமுக தொண்டர்கள் அனைவரும், தனக்கு பின்னரும் 100 ஆண்டுகள் அதிமுக மக்கள் தொண்டாற்றும் என்ற ஜெயலலிதாவின் சூளுரையை நினைவில் கொண்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்