ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் : "ஒரு வருடம் ஆகியும் நிரந்தரமாக மூட நடவடிக்கைகள் இல்லை" - நல்லகண்ணு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று ஒரு வருடம் ஆகியும், ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-22 09:43 GMT
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று ஒரு வருடம் ஆகியும், ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நல்லகண்ணு, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நல்லகண்ணு, ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், இறந்தவர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்