தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை உருவாக்க வேண்டும் - ராமதாஸ்
தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை உருவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை உருவாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் தயாராக இருந்தும் மதுவிலக்கு மூலம் கிடைக்கும் வருவாய் அதற்கு தடையாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே மாநிலங்களுக்கான இழப்பை ஈடுசெய்யும் வகையில் மானியங்கள் வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.