சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரம் : குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
வேலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், கடந்த 2014 ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமியை கொலை செய்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளார்.
இது வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான கார்த்திகேயனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.9 ஆயிரம் அபராதமும் விதித்து, வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.