படகுசவாரி மீதான தடையை நீக்க வேண்டும் - சுற்றுலாத்தளமாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் படகு சவாரி மற்றும் லைட்ஹவுஸை சுற்றிப் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு பழவேற்காடு பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தை அடுத்து, படகு சவாரி செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. மேலும், மீன் வளமும் இப்பகுதியில் குன்றியதால், மீன்வர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால், படகு சவாரிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி, சுற்றுலாத் துறையை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். லைட் ஹவுஸ் செல்ல விதிக்கப்பட்ட தடையையும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் சுற்றுலாப் பயணிகள், வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.