சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம்
சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
சூலூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என்றார். 22 தொகுதிகளில் வெற்றி பெறுவேன் என கூறும் ஸ்டாலின் எங்கு ஜோசியம் பார்த்தார் எனக் கேள்வி எழுப்பிய அவர், கருணாநிதி சிலை திறப்பு விழாவின்போது, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு, இப்போது, 3வது அணி அமைக்க கொல்லைப்புறமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஸ்டாலின் மீது முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.