சூலூர் சட்டமன்ற தொகுதிக்கான செல்போன் செயலி துவக்கம்

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில் மை சூலூர் டாட் இன் எனும் செல்போன் அப்ளிகேசன் அறிமுக விழா பகுதியில் நடைபெற்றது.

Update: 2019-05-13 19:35 GMT
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக தொழில்நுட்ப பிரிவு சார்பில், மை சூலூர் டாட் இன் எனும் செல்போன் அப்ளிகேசன் அறிமுக விழா கோவை சின்னியம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது திமுக வேட்பாளரின் குறைகள் மற்றும் அதிமுக சாதனைகள் உள்ளிட்டவை அடங்கிய வீடியோ காட்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சியுடனான இருசக்கர வாகனம் துவக்கி வைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்