அதிமுக எம்.எல்.ஏ. சத்தியா மீது வழக்குப்பதிவு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
அதிமுக எம்.எல்.ஏ. சத்தியா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் மீது, வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ. சத்தியா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் மீது, வழக்கு பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 4 ஆம் தேதி, பண்ருட்டி அருகே புதுப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் புகுந்து அதிமுக கட்சி நிர்வாகிகளை தாக்கியதாக சுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்தியா உள்ளிட்ட 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிய உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் மீது 4 வார காலத்திற்குள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கடலூர் மாவட்ட காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது