ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். தாளமுத்து நகரில் நடைப்பெற்ற, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக இந்த அணிவகுப்பு, நடத்தப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா கொடியசைத்து துவங்கி வைத்த இந்த பேரணி, தாளமுத்து நகர், மாதா நகர் சாகிர் உசேன் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று, சிலுவைப்பட்டி வந்தடைந்தது.