வண்டலூர் பூங்காவில் ஐஸ் டியூப்பில் வைத்த உணவுகளை ருசி பார்க்கும் விலங்குகள்

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் கோடை வெயிலில் இருந்து விலங்குகளை காக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-05-05 06:25 GMT
வர்தா புயலுக்கு பிறகு வண்டலூர் உயிரியியல் பூங்காவில் இயற்கை சூழல் மாறியுள்ளது. ஆயிரகணக்கான மரங்களை வாரி சுருட்டிய வர்தாவால் பூங்காவில் வெப்பத்த்தின் தாக்கம் அதிகரித்துள்ளது 
பார்வையாளர்கள் வரும் வழிகளில் நிழல் இல்லாததால் நிழல் தரும் வகையில் பச்சை ஸ்கீரின்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. கோடை வெயிலில் இருந்து விலங்குகளை காக்க ஒரு நாளைக்கு 5 முறை விலங்குகள் குளிக்க வைக்கப்படுகின்றன. சிங்கம், வெள்ளை புலிகள், யானை,ஒட்டக சிவிங்கி என அனைத்து விலங்குகளும் ஆனந்தமாக குளித்து வெப்பத்தை தணித்து கொள்கின்றன

வழக்கமாக விலங்குகளுக்கு வழங்கப்படும் உணவுகளை வெயில் காலத்திற்காக ஐஸ் டியூப்பில் வைத்து ஊழியர்கள் வழங்குகின்றனர். மனித குரங்குகளுக்கு ஐஸ் கட்டிகளுடன் சேர்த்து ஐஸ் டியூப்பாக மாற்றி வழங்கப்படும் ஆப்பிள், மாம்பழம் பப்பாளி, பேரிச்சை உள்ளிட்டவைகளை குழந்தைகள் போல் தூக்கி சென்று ஆனந்தமாக உண்டு மகிழ்கின்றன. புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு வழங்கப்படும்  இறைச்சியும் இதே பாணியில் ஐஸ் கட்டியோடு சேர்த்து வழங்கப்படுகின்றன. 

இங்கு தென்னங்கீற்று கொட்டகையுடன் குளிர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் வெள்ளை புலிகள் குளித்து வெப்பத்தை தணித்து கொள்கின்றன. வெப்பத்தின் அதிகரிக்கும் வேளையில், கூண்டுக்குள் இருக்கும் வெள்ளை புலிகள்  அதிவேக மின்விசிறி காற்றில் களைப்பாறுகிறது. பறவை கூண்டுகளில் சாக்கு பைகள் கட்டி அதில் தண்ணீர் பீய்ச்சி அடித்து பறவைகள் இருக்கும் பகுதியை குளிர்ச்சியாக வைத்துள்ளனர் ஊழியர்கள். அக்னி வெயிலின் கொடுமையை மனிதர்களே தாங்கி கொள்ள முடியாத நிலையில், விலங்குகள் மற்றும் பறவைகளை வெப்ப தாக்கத்தில் இருந்து காக்க வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் செய்துள்ள ஏற்பாட்டுக்கு சுற்றுலா பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்