அரசுப் பள்ளி மாணவர்கள் 25 பேர் வெளிநாடு பயணம் : கல்வி சுற்றுலா திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 25 பேர், கல்வி சுற்றுலா திட்டத்தின் கீழ் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.

Update: 2019-05-04 13:31 GMT
பள்ளி கல்வித்துறை சார்பில், படிப்பு மற்றும் இதர திறமைகளில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து, வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 50 மாணவர்கள், ஃபின்லாந்து சென்றுவந்த நிலையில், தற்போது 17 மாணவிகள், 8 மாணவர்கள் என 25 பேர் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இருநாடுகளிலும் 10 நாட்கள்  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள அவர்களை  வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. இதில்,  பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்