கிக்பாக்ஸிங் போட்டியில் கலக்கும் அரசு பள்ளி மாணவி : தமிழக அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள்

நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான கிக்பாக்ஸிங் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள தர்மபுரி அரசு பள்ளி மாணவி, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2019-04-30 02:53 GMT
தருமபுரியை அடுத்த வெள்ளோலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. கட்டிட தொழிலாளியான இவர், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த கட்டிட விபத்தில் உயிரிழந்தார்.இவரின் 3-வது மகளான கோகுலவாணி வெள்ளோலை அரசு உயர் நிலை பள்ளியில் பயின்று  வருகிறார். கிக் பாக்ஸிங் போட்டியில் ஆர்வம் கொண்ட அவர், கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து நேபாளத்தில் மே மாதம்10, 11-ம் தேதிகளில் நடைபெறும் சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். ஆனால் குடும்ப ஏழ்மை காரணமாக போட்டிகளுக்காக செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும், எனவே தமிழக அரசு தனக்கு உதவ வேண்டும் எனவும் கோகுலவானி கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்