சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 2 வரை விடுமுறை
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே1ம் தேதி முதல் ஜூன் 2 தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே1ம் தேதி முதல் ஜூன் 2 தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை வாரந்தோறும், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மீது புதன், வியாழக் கிழமைகளில் விசாரணை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க 16 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க 12 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.