கடல்நீரை குடிநீராக்க மாற்றுவது குறித்து விழிப்புணர்வு
சென்னையில் கடல் நீரை குடிநீராக்க மாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் அமைப்பு சார்பாக நடைபயணம் நடைபெற்றது.
சென்னை விவேகானந்தர் இல்லம் முதல் மெரினா கடற்கரை வரை நடைபெற்ற இந்த நடைபயணத்தில் அந்த சபையை சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கையில் மூலிகைகள் கலந்த கலசங்களை எந்தியபடி கடல்நீரை குடிநீராக மாற்றுவோம் என்ற முழக்கத்துடன் கடல்வரை சென்று அந்த கலச்சத்தில் இருந்த நீரை கடலில் கரைத்தனர்.