2700 அரசு பள்ளிகளில் 80 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முடிவில் தகவல்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2700 அரசு பள்ளிகளில், வெறும் 80 பள்ளிகள் மட்டுமே நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.

Update: 2019-04-25 11:05 GMT
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 91.3 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.பல புள்ளி விவரங்களை அரசு வெளியிடாத நிலையில், தற்போது தற்போது சில விவரங்கள் கசிந்துள்ளன.அந்த வகையில் 2,700 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன என்றும், 1200 தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.2018 ஆம் ஆண்டு 238 அரசுப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை  பெற்ற நிலையில், தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றிருப்பது கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.மேலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் என முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவிற்கு இல்லை என்றும், அதிகபட்சமாக கணிப்பொறி அறிவியல் பாடத்தில்1500 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 1200 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக  கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்