துரை தயாநிதி நிறுவனத்தில் ரூ.40 கோடி சொத்துக்கள் முடக்கம்

முக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு சொந்தமான நிறுவனத்தின் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

Update: 2019-04-24 12:09 GMT
சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து அரசுக்கு  பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக  துரை தயாநிதி உள்ளிட்டோருக்கு சொந்தமான நிறுவனத்தின் மீது  பல வழக்குகள் தொடரப்பட்டு  விசாரணை நடைபெற்று வருவதாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்துக்கு சொந்தமாக மதுரை ,சென்னையில் உள்ள 25 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு 40 கோடியே 34 லட்சரூபாய் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   
Tags:    

மேலும் செய்திகள்