சிறை விதிமுறை மீறி கைதிகள் போராட்டம் - 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு
மதுரை மத்திய சிறையில் விதிமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மத்திய சிறையில் விதிமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் துன்புறுத்துவதாகக் கூறி மதுரை சிறை கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதோடு, மதில் சுவர் மீது ஏறி, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல் இணைஆணையர் சசிமோகன் தலைமையில் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் மதுரை மேற்கு வட்டாச்சியர் கோபிதாஸ், சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் இணைந்து, நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட 25 கைதிகள் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறை விதிமுறை மீறி அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. மத்திய சிறை புற காவல் நிலையத்தின் காவலர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரை தொடர்ந்து, கரிமேடு போலீசார், இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்