"இனி ஒரு நிமிடம் கூட ரயிலை இயக்க முடியாது" : ரயிலை பாதி வழியில் நிறுத்திய ஓட்டுநர்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே சரக்கு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2019-04-19 06:01 GMT
நாகை மாவட்டம் சீர்காழி அருகே சரக்கு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வைத்தீஸ்வரன்கோயில் ரயில் நிலையம் வழியாக சரக்கு ஏற்றி வந்த ஒரு சரக்கு ரயில், திடீரென நிறுத்தப்பட்டது. ரயில் நிலைய அதிகாரி, சிக்னல் சரியாக இருந்தும் சரக்கு ரயில் ஏன் நிறுத்தப்பட்டது என்று ரயிலை இயக்கி வந்த ஓட்டுநர் முத்துராஜாவிடம் கேட்டுள்ளார்.அதற்கு ரயில் ஓட்டுநர் முத்துராஜா, நான் 12 மணி நேரம் வேலை பார்த்து விட்டேன், இனி ஒரு நிமிடம் கூட என்னால் ரயிலை இயக்க முடியாது என்றும் சரக்கு ரயிலை வேறு டிரைவர் வைத்து இயக்கி கொள்ளுங்கள்" எனவும் கூறியுள்ளார். சரக்கு ரயிலில் பெட்டிகள் அதிகம் என்பதால், ரயில்வே கேட்'டை தாண்டி 100 மீட்டர் வரை ரயில் பெட்டிகள் நின்றது. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அப்பகுதி மக்கள் வேண்டுகோளை ஏற்று, ஓட்டுநர் முத்துராஜா ரயிலை இயக்கி சென்றார்.
Tags:    

மேலும் செய்திகள்