அதிமுக - அமமுகவினர் இடையே மோதல்
திருச்சி சாத்தனூரில், அதிமுக பிரமுகர் கந்தசாமி என்பவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
திருச்சி சாத்தனூரில், அதிமுக பிரமுகர் கந்தசாமி என்பவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று அமமுகவை சேர்ந்த சிலர் கந்தசாமியை தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது, அ.ம.மு.க தொண்டர்கள் சிலர் கந்தசாமியை கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, சிகிச்சை பெற்று வரும் கந்தசாமியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேரில் வந்து சந்தித்து ஆறுதல் கூறினார்.