சிகிச்சைக்காக தமிழகம் வந்த வங்கதேச இளைஞர் காணவில்லை - மொழி தெரியாமல் சகோதரரை தேடும் பரிதாபம்
வங்க தேசத்தை சேர்ந்த புராஜேஷ் சந்திரநாத் என்கிற இளைஞர் காணாமல் போன, தமது சகோதரரை தேடி சென்னை வந்துள்ளார்.
இவரது சகோதரரான, பங்கஜ் சந்திராநாத் என்பவருக்கு விபத்தில் தலை மற்றும் கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி மாதம், சகோதரர் உடன் தமிழகம் வந்தார் புராஜேஷ் சந்திரநாத். விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, பங்கஜ் சந்திராநாத், திடீரென காணாமல் போயுள்ளார்.இது குறித்து வேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள புராஜேஷ், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து, போலீசாரிடம் சகோதரரை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.மொழி தெரியாத நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் தமது சகோதரர் பங்கஜை தேடி வருகிறார்.