ராஜராஜசோழனை புதைத்த இடத்தை ஆய்வு செய்க - தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

இராச இராச சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் துறை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

Update: 2019-04-11 18:56 GMT
ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில்,  கும்பகோணம் அருகே உடையாளூர் ஆரியப்படை, சோழப்பட்டை, சோழமாளிகை போன்ற கிராமங்களில், ராஜராஜசோழன் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் மாளிகைகள் உள்ளதாகவும், முறையாக தொல்லியல் துறை ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன்,சுந்தர் அமர்வில் விசாரனைக்கு வந்த போது, இராச இராச சோழன் அடக்கம் செய்ய பட்ட இடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
Tags:    

மேலும் செய்திகள்