ஓசூரில் பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் செய்ய தடை கோரிய வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்
பாலகிருஷ்ண ரெட்டி, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரியில் தீர்ப்பளித்தது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, அரசு சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஜனவரியில் தீர்ப்பளித்தது. இதனால், எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர் பதவியையும் அவர் இழந்தார். இந்நிலையில், அவரது ஓசூர் தொகுதிக்கு ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் அதிமுக வேட்பாளராக அவரது மனைவி ஜோதி பாலகிருஷ்ணரெட்டி அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க கோரி ஒசூரைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்ட நிலையில், பிற்பகலில் அவசர வழக்காக இதை விசாரிக்க நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.