கோவை சிறுமியின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய சபரிமாலா
பிரேத பரிசோதனை அறிக்கை வழங்குவதில் தாமதம் - பெற்றோர் புகார்
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் துடியலூர் சிறுமியின் குடும்பத்தினருக்கு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பணியில் இருந்து விலகிய ஆசிரியை சபரிமாலா, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். அப்போது பேசிய சிறுமியின் தாய் தமது மகளின், பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க, மருத்துவமனையும், காவல்துறையும் தாமதப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். சில பத்திரிகைகளில் குழந்தை தொடர்பாக மோசமான தகவல்கள் பரப்பப்பட்டு வருவது வேதனை அளிப்பதாக குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்தனர்.