முன்னாள் TNPSC தலைவர் உள்ளிட்டோர் நியமனத்துக்கு இடைக்கால தடை

லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களாக ராஜாராம் மற்றும் ஆறுமுகம் நியமிக்கப்பட்டதற்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

Update: 2019-04-05 13:37 GMT
கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், லோக் ஆயுக்தா சட்டத்தின் படி அதன் உறுப்பினர்கள் சட்டத்துறை சார்ந்த அரசியல் சார்பு இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, உயர்நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் ராஜாராம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டது லோக் ஆயுக்தாவின் சட்டத்திற்கு எதிரானது என்றும் எனவே அந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை  விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்  எஸ் எஸ் சுந்தர் அமர்வு,  இருவரின் நியமனத்திலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை  என கூறி  இருவரின் நியமனத்திற்கும்  இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்