"பட்டாசு தொழிலுக்கு துணை நிற்போம்" - முதலமைச்சர் பழனிசாமி
பட்டாசு தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க அரசு உறுதுணையாக நிற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பட்டாசு தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க அரசு உறுதுணையாக நிற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். விருதுநகர் மக்களவை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், உச்ச நீதிமன்றத்தில் உரிய நீதி கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.