ஏ.டி.எம். கார்டு காணாமல் போனது தொடர்பான புகார்
போலீசார் புகாரை வாங்க மறுப்பதாக பெண் குற்றச்சாட்டு
ஏடிஎம் கார்டு காணாமல் போனது தொடர்பான புகாரை வாங்காமல்
போலீசார் அலை கழிப்பதாக பாதிக்கப்பட்ட செல்வி என்ற பெண்
குற்றம்சாட்டியுள்ளார். சென்னை வடபழனியை சேர்ந்த செல்வியின்
ஏ.டி.எம். கார்டு கடந்த 29 -ந்தேதி காணாமல் போனது. அவரது வங்கி கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதால்அதிர்ச்சி அடைந்த செல்வி வங்கி கணக்கை முடக்கினார்.போலீசில் புகார் அளிக்க வடபழனி , அசோக் நகர் காவல் நிலையங்களுக்கு சென்ற போது புகாரை பெற்று கொள்ளாமல் தன்னை அலைகழித்ததாக
செல்வி குற்றம் சாட்டியுள்ளார். காவல் ஆணையர் அலுவலகத்திற்கு
சென்றும் தனது புகாரை பெறவில்லை என்று செல்வி வேதனை தெரிவித்துள்ளார்.