உள்துறை கூடுதல் செயலாளரிடம் சாதிக் பாட்சாவின் மனைவி மனு

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியை சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹ்னா பானு சந்தித்து மனு அளித்தார்.

Update: 2019-03-27 13:56 GMT
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டியை, சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹ்னா பானு சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது கணவரின் நினைவு நாளில் பத்திரிகைகளில் கூடா நட்பு கேடாய் முடியும் என விளம்பரம் செய்திருந்ததாகவும், அதன்பின்னர் தான் சென்ற கார் மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். பின்பு தனக்கு உதவி செய்தவர்களை மிரட்டத் தொடங்கி இருப்பதால், உள்துறை செயலாளரிடம் மனு அளித்திருப்பதாகவும் அவர் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்