திருப்பூரில் 27ஆம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார் பிரேமலதா - தேமுதிக அறிவிப்பு
நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்
நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.வரும் 27ஆம் தேதி திருப்பூரில் பிரேமலதா பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தேமுதிக கட்சி அறிவித்துள்ளது.திருப்பூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தை தொடங்கும் பிரேமலதா தொடர்ந்து தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செய்கிறார்.வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வரை அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக தேமுதிக தலைமை கழகம் அறிவித்துள்ளது