முன்வைப்புத் தொகையில் ரூ.500 குறைந்தது : ஏமாற்றத்துடன் திரும்பிய சுயேட்சை வேட்பாளர்

முன்வைப்புத் தொகையில் 500 ரூபாய் குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் திரும்பிச் சென்றார்

Update: 2019-03-22 05:26 GMT
விழுப்புரத்தில் முன்வைப்புத் தொகையில் 500 ரூபாய் குறைந்ததால் வேட்புமனு தாக்கல் செய்யாமல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் திரும்பிச் சென்றார்.உடனே செல்போனில் மனைவியை தொடர்புகொண்டு கேட்டபோது, பங்குனி உத்திர செலவுக்காக 500 ரூபாய் பணம் எடுத்ததைச் சொல்லியுள்ளார்.இதையடுத்து, யாரிடமாவது 500 ரூபாய் பெற்றுக்கொண்டு மீண்டும் வருவதாக சொல்லிவிட்டு உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விவசாயி அரசன், புறப்பட்டுச் சென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்