காய்கறி மண்டி உரிமையாளர் கொண்டு சென்ற ரூ5.98 லட்சம் - உரிய ஆவணங்கள் இல்லததால் பணம் பறிமுதல்
கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் அருகே தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
கோவை மாவட்டம் ஜடையம்பாளையம் அருகே தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த காய்கறி மண்டி உரிமையாளர் அப்துல் ஹக்கீம் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 5 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கைப்பற்றப்பட்ட பணம் மேட்டுப்பாளையம் சார் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தாசில்தார் புனிதா தெரிவித்தார்.