"தேர்தல் நடத்துவதில் ஒத்த கருத்து" - வில்சன், வழக்கறிஞர்- தி.மு.க

மக்களவை தேர்தலுக்கு பிறகு, மூன்று தொகுதி இடைத் தேர்தலை நடத்தினால் என்ன பிரச்சினை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2019-03-15 11:22 GMT
3 தொகுதி இடைத்தேர்தலை நடத்தக் கோரி தி.மு.க அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அப்துல் நசீர் அமர்வு, விசாரணைக்கு எடுத்து கொண்டது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக ஆஜரான தேர்தல் ஆணையத் தரப்பு, பதிலளிக்க கால அவகாசம் கோரியது. ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என தி.மு.க தரப்பு கோரிக்கை வைத்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை எனக் கருத்து தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டதோடு, விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்