பள்ளியை சீரமைத்து தர கோரி மனு அளித்த 1ம் வகுப்பு மாணவி

பொன்னேரி அருகே பழுதான பள்ளியை சீரமைத்து தருமாறு ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Update: 2019-03-07 05:57 GMT
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பாஸ்கரன் மகள் முத்தரசி. ஆறு வயதேயாகும் முத்தரசி அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துவருகிறார். மாணவி படித்துவரும் பள்ளியின் பின்பகுதி பழுதான நிலையில், மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிப்போயுள்ளது. இதுகுறித்து, பொன்னேரி கோட்டாட்சியரிடம் மனு அளித்த மாணவி முத்தரசி, அதனை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தார். மாணவியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்