அங்காளம்மன் கோயில் மாசி திருவிழா - பொங்கல் வைத்து வழிபாடு செய்த பெண்கள்

சென்னை மாதவரம் பகவத் நகரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது .

Update: 2019-03-06 02:11 GMT
சென்னை மாதவரம் பகவத் நகரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் மாசி  திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது . விழாவின் முக்கிய நிகழ்வான மாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். காய்கறி மற்றும் பழவகைகளில்  பந்தல் அமைத்து உடுக்கை பம்பை மேளத்துடன் அம்மனை அலங்கரித்து வழிபாடு செய்தனர் . இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்