திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம் - ஆளுனர் அறிவிப்பு

வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் தாமரைச்செல்வியை நியமனம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-03-06 02:09 GMT
வேலூரில் உள்ள  திருவள்ளுவர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் தாமரைச்செல்வியை நியமனம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.   ஆளுனர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் துணைவேந்தராக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி., வளாகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பேராசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர் தாமரை செல்வி என்பது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்