எச்ஐவி ரத்தம் : குழந்தை பிறந்த 45 நாட்களில் எடை அதிகரிப்பு - வனிதா, மதுரை ராஜாஜி மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-03-04 10:04 GMT
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்து தற்போது 45 நாட்கள் நிறைவடைந்துள்ளது. குழந்தைக்கு, எச்ஐவி தொற்று உள்ளதா ? என மருத்துவர்கள் இன்று பரிசோதனை நடத்துகின்றனர். பிறக்கும் போது ஒன்று புள்ளி ஏழு கிலோவாக இருந்த குழந்தையின் எடை, தற்போது அதிகரித்துள்ளதாக, மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்