உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரம் - விவசாய நிலங்களை கையகப்படுத்தும் உத்தரவு ரத்து
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி, 9 விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலில் தரிசு நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதாகக் கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் எந்த அறிவிப்பும் இன்றி விவசாய நிலம் கையகப்படுத்துவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, 4 வாரங்களில் தகுந்த உத்தவு பிறப்பிக்க வேண்டும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.