நெருங்கி வரும் நாடாளுமன்ற தேர்தல் : பள்ளி தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா?
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பள்ளி தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் 10, 11 , 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி நடைபெற உள்ளன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெற உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி, வாக்குச் சாவடி மையங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் செல்ல நேரிடும். மேலும், வெயில் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்பதால், 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகளை முன்கூட்டியே நடத்துமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.