ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை : ஆணையம் விசாரணை தொடர தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி, உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.

Update: 2019-02-22 17:36 GMT
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி, உயர்நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில்  மனு தாக்கல் செய்யபட்டது. அதில் 21 துறைகளை சேர்ந்த மருத்துவர்களை கொண்ட தன்னிச்சையான குழு அமைக்க வேண்டும் என்றும், அதுவரை,  விசாரணை ஆணையம் முன் நேரில் ஆஜராக அப்பல்லோ மருத்துவமனை தரப்புக்கு விலக்கு அளிக்க வேண்டும் என  கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு  விளக்கம் அளிக்க, அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் கால அவகாசம் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை, ஆணையம் விசாரணையை தொடர தடையில்லை என தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்