அனைத்து மீனவர்களுக்கும் ஏன் டிரான்ஸ்பாண்டர் வழங்க கூடாது ? : மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல்
மீனவர்கள் நலன் முக்கியமென்றால் ஏன் அனைத்து கடலோர மாவட்ட மீனவர்களுக்கும், டிரான்ஸ்பாண்டர் வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்படுவது குறித்து, சர்வதேச நீதிமன்றத்தை அணுக, மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில், மீனவர்கள் நலன் முக்கியமென்றால் ஏன் அனைத்து கடலோர மாவட்ட மீனவர்களுக்கும், டிரான்ஸ்பாண்டர் வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், மீனவர்களுக்கு டிரான்ஸ்பாண்டர் கருவி வழங்க மத்திய அரசின் பங்களிப்பாக எவ்வளவு மானியம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து ஒரு வாரத்தில் கேட்டு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.