கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு : பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயர்வு

சென்னை பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-02-17 05:11 GMT
சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த ஏரிகளில் நீர் இருப்பு குறைந்ததால் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டப்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும்படி தமிழக பொது பணித்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து கடந்த 7 ந்தேதி திறந்து விட்ட தண்ணீர்  தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு வந்து சேர்ந்தது. 

பின்னர் பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 19.51 அடியாகவும், தண்ணீர் இருப்பு  209 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. இந்த தண்ணீர் கோடை காலத்தில் குடிநீர் தேவையை போக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்