"8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது" - ராமதாஸ்

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது என வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2019-02-09 07:17 GMT
எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது என வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில், எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யவும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தவும், தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இதனை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்